சென்னை: கடல் படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை வெளியிடக் கூடாது என்று மணிரத்னம் கார்த்திக் மற்றும் ராதாவுக்கு கன்டிஷன் போட்டுள்ளார்.
மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் படத்தை எடுத்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. படம் துவங்கி இத்தனை நாட்களாகியும் அது குறித்த தகவல்கள் கசிந்துவிடாமல் மணி ரகசியமாக வைத்துள்ளார்.
மேலும் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் வெளியாட்கள் வருவதை தடுக்க தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். ஆனால் அதற்கு மணிரத்னம் ஒத்துக்கொள்ளவில்லை.
படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை எந்த பத்திரிக்கைகளிலும் வெளியிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளை பொது நிகழ்ச்சிகள் ஏன் நண்பர்கள் வீடுகளுக்கு கூட அனுப்பாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த துளசி தன்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாகக் கூறிவிட்டார்.
Post a Comment