மும்பை: பாலிவுட்டை இப்போதைக்கு செமத்தியா கலக்கி வருவது கத்ரீனா கைப்தான். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று மார்தட்டிக் கூறியுள்ளார் உக்ரைனிலிருந்து பாலிவுட்டில் பட்டையைக் கிளப்ப வந்திருக்கும் நதாலியா கோஸனோவா.
முன்பெல்லாம் உள்ளூரிலேயே நடிகைகளைக் கொள்முதல் செய்து வந்தார்கள். இப்போதெல்லாம் பாரீன் போய் ஆள் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியப் படங்களில் நடித்த முதல் வெளிநாட்டு நடிகை ஹெலன்தான். அதன் பின்னர் அமி ஜாக்சன், கத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், யானா குப்தா, பார்பரா மோரி என ஏகப்பட்ட பேர் வந்து விட்டனர்.
இந்த வரிசையில் தற்போது உக்ரைனிலிருந்து ஒரு உலுக்கும் அழகியைக் கூட்டி வந்துள்ளனர் பாலிவுட்டுக்கு. இவர் ஒரு மாடல் அழகி. அன்ஜூனா பீச் என்ற படத்தில் நடித்தவர். தற்போது அழகிகளின் குவியல் படமாக மாறி வரும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் புக் ஆகியுள்ளார். சதீஷ் ரெட்டி தயாரித்து, ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே வீணா மாலிக் உள்ளிட்டோர் குவிந்து கிடக்கின்றனர் என்பது நினைவிருக்கலாம்.
இப்படத்தில் நடிக்கவிருப்பது குறித்து நதாலியா கூறுகையில், பாலிவுட் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறதகு. இதில் ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்களுடன் இணையப் போவதை நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு அருமையான படம். என் மூலமாக நல்லதொரு மசாலாவை ரசிகர்கள் ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நானும் ஏமாற்ற மாட்டேன்.
எனக்கு மிதுன்சக்கரவர்த்தி, ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரைப் பிடிக்கும். அவர்களுடனும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.
கத்ரீனா கைப்பையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாலிவுட்டை அவர்தான் கலக்கி வருகிறாராமே. பாலிவுட்டில் குறுகிய காலத்தில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தவர் அவர். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றார் அவர்.
நதாலியா இப்போது இந்தி கற்க ஆரம்பித்துள்ளாராம். சீக்கிரமே இந்தியில் நன்றாக மாட்லாடுவாராம்...
Post a Comment