தான் நடிக்க வந்து 20 ஆண்டுகளானதை கேக் வெட்டி, அமலா பால் உள்ளிட்டோருக்கு ஊட்டி கொண்டாடினார் நடிகர் விஜய்.
1992-ல் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். 20 ஆண்டுகளில் 53 படங்களில் நடித்துமுடித்துள்ளார்.
திரையுலகில் தனது 20ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் அவர் கேக் வெட்டினார்.
ஏஎல் விஜய் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில், விஜய்க்காக பெரிய கேக் வரவழைத்த தயாரிப்பாளர், படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் முன்னிலையில் விஜய்யை கேக் வெட்ட வைத்தார்.
உடன் நடிக்கும் ஹீரோயின் அமலா பால், இயக்குநர் விஜய் ஆகியோருக்கு கேக்கை ஊட்டினார் விஜய்.
Post a Comment