கொசுக்கடியில் புவனேஸ்வரி... பாய்ந்தது 3வது வழக்கு!

|

3rd Case Against Actress Buvaneswari

சென்னை: புழல் சிறையில் கொசுக்கடிக்கு மத்தியில் பெரும் புழுக்கத்தி்ல தவித்து வருகிறாராம் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி. ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைதாகியுள்ள அவர் தற்போது 3வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போன புவனேஸ்வரி தனது அடியாட்களுடன் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் தரையில்தான் படுக்கிறாராம். கொடுக்கும் உணவை வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறாராம். கொசுக்கடி தாங்க முடியவில்லையாம். பெரும் அவஸ்தையிலும், புழுக்கத்திலும் தவித்து வருகிறாராம்.

தியேட்டர் வன்முறையைத் தொடர்ந்து அவர், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் காரை விற்று விட்டு பின்னர் மீண்டும் திருப்பி எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது 3வது வழக்கில் அவர் கைதாகியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் வசிக்கும் குருநாதன் என்ற ரியல் எஸ்டேட் அதிபர், நடிகை புவனேஸ்வரி மீது ஒரு புகார் மனுவை கொடுத்தார். டி.வி. தொடர் தயாரிப்பதாக கூறி, புவனேஸ்வரி தன்னிடம் ரூ.1.5 கோடி வாங்கியதாகவும், பின்னர் அந்த பணத்தை திருப்பித்தராமல் மிரட்டியதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகார் மனு மீது, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். நேற்று இந்த புதிய வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விவரத்தை போலீசார் ஜெயிலுக்கு சென்று நடிகை புவனேஸ்வரியிடம் நேற்று பகல் தெரிவித்தனர்.

இந்த புதிய வழக்கில் புவனேஸ்வரி இன்று சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபோக புவனேஸ்வரி மீ்து மேலும் சில வழக்குகள் போடப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment