கமலிடம் 10 நிமிடம் தனியாக பேசிய நயனதாரா

|

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜைக்கு வந்த கமல்ஹாசனுடன் தனியாக 10 நிமிடம் பேசினார் நடிகை நயனதாரா. கமல்ஹாசனின் அடுத்த படத்தில் நடிக்க அப்போது அவர் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

nayanthara meets kamalhassan
Close
 

விஜய்யின் துப்பாக்கியை முடித்து கீழே வைத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து à®'ரு படம் தயாரிக்கப் போகிறார். படத்தின் பெயர் ராஜா ராணி. அட்லி இயக்குகிறார். இதில் ஆர்யா, ஜெய் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை கமல்ஹாசனின் வீட்டில் வைத்து நடந்தது. அப்போது பூஜை முடிந்த பின்னர் கமல்ஹாசனுடன் பேச விரும்புவதாக நயனதாரா கூறவே, கமல்ஹாசனும் தனியாக கூட்டிச் சென்று 10 நிமிடம் பேசினார். அப்போது கமல்ஹாசனுடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கமல் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் கமல்ஹாசனின் அடுத்த தமிழ்ப் படத்தில் நயனதாராவுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ à®'ரு வாய்ப்பு நிச்சயம் உண்டு என்று அடித்துக் கூறுகிறார்கள் பூஜைக்கு வந்தவர்கள்.

 

Post a Comment