கமலிடம் விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ கேட்டாரா ஜெயலலிதா?

|

Jaya Asks Kamal Vishwaroopam Specia Show

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் சிறப்பு காட்சியை தனக்காக காண்பிக்க முடியுமா என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது.

விஸ்வரூபம் படம் வரும் 10ம் தேதி டிடிஹெச்சில் ரிலீஸாகிறது. அதன் பிறகு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை டிடிஹெச்சில் ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் டிடிஹெச் ரிலீஸிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர். விஸ்வரூபம் சந்திக்கும் பிரச்சனை பற்றிய செய்திகளைப் படிக்கையில் அப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்பரூபத்தை உடனே பார்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவும் ஆர்வமாக உள்ளாராம்.

தனக்காக சிறப்பு காட்சி காண்பிக்க முடியுமா என்று அவர் கமலிடம் கேட்டுக் கொண்டதாக வதந்திகள் பரவியுள்ளது.

 

Post a Comment