கார்த்தியுடன் முதல் முறையாக கைகோர்க்கும் ஹரி!

|

Hari Direct Karthi

கமர்ஷியல் படங்களில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்ட ஹரி, அடுத்து கார்த்தியுடன் கை கோர்க்கிறார்.

பருத்தி வீரனில் ஆரம்பித்து அலெக்ஸ் பாண்டியன் வரை அனைவராலும் விரும்பப்படும் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் கார்த்தி.

மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்போது பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

'தமிழ்', 'சாமி', 'வேல்', 'சிங்கம்' என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹரி, முதல் முறையாக கார்த்தியுடன் கைகோர்க்கிறார்.

இப்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவை வைத்து 'சிங்கம் 2' படத்தை இயக்கி வரும் ஹரி அடுத்த படத்தில் கார்த்தியை இயக்குகிறார். பெயரிடப்படாத இப்புதிய படத்தின் நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரபல விநியோகஸ்தர்,தயாரிப்பாளரான இவர் இப்பொழுது கே.பாலச்சந்தர் இயக்கி, ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' படத்தை அதே பெயரில் மீண்டும் தயாரித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கார்த்தி - ஹரி கூட்டணியின் படம் ஆரம்பமாகிறது.

 

Post a Comment