லாஸ் ஏஞ்சலெஸ்: 46 வயதான ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி கர்ப்பமடைந்துள்ளார். அவரது காதலர் ஆலிவர் மார்ட்டினஸின் குழந்தை இது என்று ஹாலியின் பிரதிநிதி கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து பெற்றுக் கொள்ளும் முதல் குழந்தையாகும் இது. தற்போது ஹாலி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் தெரிய வந்துள்ளதாம்.
ஹாலிக்கு ஏற்கனவே தனது முன்னாள் காதலர் கேப்ரியல் ஆப்ரி மூலம் நான்கு வயதில் மகள் உள்ளாள். அந்தக் குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக ஆப்ரிக்கும், ஹாலிக்கும் கோர்ட் கேஸ் நிலுவையில் உள்ளது.
Post a Comment