இனியும் எஸ்எஸ்எல்சி சொல்லாதீங்க.. நான் இப்போ ப்ளஸ் ஒன்! - லட்சுமி மேனன்

|

Lakshmi Menon S Wish Study More

கும்கி, சுந்தரபாண்டியன் நாயகி லட்சுமி மேனனை இனி எஸ்எஸ்எல்சி மாணவி என்று யாரும் சொல்ல முடியாது. ஆமாம்... அப்படி யாராவது சொன்னால் அவர் உடனே சொல்வது, 'இனியும் அப்படி சொல்லாதீங்க, நான் ப்ளஸ் ஒன் போயாச்சு!'

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வந்து விட்டார் லட்சுமி மேனன். தமிழில் முதல் நிலை நாயகியாகிவிட்ட லட்சுமி, நடிப்புடன் படிப்பையும் தொடர்கிறார்.

சமீபத்தில் நடிப்புக்கு இரண்டு மாதங்கள் முழுக்குப் போட்டுவிட்டு, கொச்சிக்குப் போய் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதி முடித்தார்.

அடுத்து இப்போது ப்ளஸ் ஒன் போகிறாராம். யாராவது அவரைப் பார்த்து பத்தாம் வகுப்பு படிக்கும்போதே முன்னணி நடிகை ஆகிட்டீங்களே என்றால், "அய்யோ.. நான் பத்தாம் வகுப்பு முடிச்சிட்டேன். இப்போ ப்ளஸ் ஒன் போறேன்...," என்கிறார் செல்லமாக.

நடிப்பு, படிப்பு.. எது உங்கள் சாய்ஸ் என்றால், "நடிப்பு படிப்பு இரண்டுமே பிடித்திருக்கிறது. விடுமுறையில் படங்களில் நடிப்பேன். ஆசிரியர்களும், சக மாணவர்களும் படிப்பில் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். படித்துக் கொண்டே நடிப்பேன்," என்றார்.

 

Post a Comment