சென்னை: விஜய்யின் தலைவா படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
தலைவா படத்தில் முதல் முறையாக விஜய் அரசியல் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டுக்கு தயாராகி வருதால் படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த தணிக்கைக் குழு படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும்படியான யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளனர்.
Post a Comment