சென்னை: தனுஷை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் பிரபல நாயகனாகத் திகழ்ந்தவர் கார்த்திக். இப்போது நாடாளும் மக்கள் கட்சி என அரசியல் கட்சி ஆரம்பித்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டி வருகிறார்.
சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், இப்போது படங்களில் கவுரவ வேடம் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
‘மாற்றான்' படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் புதிய படத்தில் கார்த்திக்கும் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் செப்டம் 2-ம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.
‘அயன்', ‘மாற்றன்' படங்களைப்போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.
Post a Comment