கரூர் வந்தார் இளையராஜா.. ராஜராஜசோழனின் போர்வாளுக்காக மக்கள் முன் மெட்டமைத்தார்!

|

கரூர்: ராஜாராஜ சோழனின் போர்வாள் என்ற படத்துக்காக கரூரில் மக்கள் முன் மெட்டமைத்தார் இசைஞானி இளையராஜா.

சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள்.

ஆர்எஸ் அமுதேஸ்வர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

கரூர் வந்தார் இளையராஜா.. ராஜராஜசோழனின் போர்வாளுக்காக மக்கள் முன் மெட்டமைத்தார்!

உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுகளை மக்கள் முன்பாக இசைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா. அதற்கான இடமாக கரூரில் உள்ள கருவூரார் ஜீவசமாதி அடைந்த இடத்தையும் அவர் தேர்வு செய்தார்.

அதன்படி இன்று காலை கரூருக்கு வந்த இசைஞானி, இந்தப் படத்துக்கான மெட்டுகளை மக்கள் முன்பாக இசையமைத்தார்.

இளையராஜாவைக் காரண ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது, "அமைதியாக இருந்து இசையைக் கேளுங்க, உங்களுக்காகத்தான் நான் வந்திருக்கிறேன்," என்று கூறி கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார் இளையராஜா.

 

Post a Comment