பைக் நடிகர் படத்தின் காட்சி கசிந்ததா, கசியவிடப்பட்டதா?

|

சென்னை: பைக் பிரியர் நடிகர் நடித்து முடித்துள்ள படத்தின் ஒரு காட்சி இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பைக் பிரியர் நடிகர் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் பல ரிஸ்க் எடுத்து நடித்ததாக கூறப்படுகிறது. நடிகருக்கு சண்டை காட்சியின்போது காலில் காயம் ஏற்பட்டது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அண்மையில் அந்த படத்தில் இருந்து ஒரு காட்சி மட்டும் இணையதளத்தில் கசிந்தது. இதை பார்த்து அவரது ரசிகர்கள் கொதித்துவிட்டனர். படக்குழுவினரோ காட்சிகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களை குடைந்துவிட்டார்களாம். அதற்கு அவர்களோ, பரபரப்பை ஏற்படுத்த இவர்களே ஒரு காட்சியை கசிய விட்டுவிட்டு நம்மை போட்டு இந்த பாடு படுத்துகிறார்களே என்று புலம்புகிறார்களாம்.

இந்த காட்சியை இணையதளத்தில் பார்த்த ப்ரோ ரசிகர்கள் ஆமா, இவர்கள் வேண்டும் என்றே வெளியிட்டிருப்பார்கள் என்று கமெண்ட் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment