சூர்யா படத்துக்கு உலகிலேயே முதல் முறையாக ரெட் ட்ராகன் கேமிரா!

|

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்துக்கு உலகிலேயே முதன் முறையாக ‘ரெட் டிராகன்' என்னும் கேமிராவை பயன்படுத்துகிறார்களாம்.

சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு, சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சூர்யா படத்துக்கு உலகிலேயே முதல் முறையாக ரெட் ட்ராகன் கேமிரா!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் உலகிலேயே முதன் முறையாக ‘ரெட் டிராகன்' என்னும் கேமிராவை பயன்படுத்தி படமாக்குகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

தமிழில் ரெட் ஒன் வகை கேமிராக்கள் சில ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது நவீன தொழில்நுட்பத்தோடு வெளிவந்துள்ள இந்த ரெட்-டிராகன் டிஜிட்டல் கேமிராவை இப்படத்தில் பயன்படுத்தவுள்ளார் சந்தோஷ் சிவன். ஏற்கெனவே இவர், துப்பாக்கி படத்திற்காக ஆரி அலெக்சா எனும் கேமராவை இந்திய சினிமாவில் முதன் முறையாக பயன்படுத்தினார்.

சூர்யா படத்துக்கு உலகிலேயே முதல் முறையாக ரெட் ட்ராகன் கேமிரா!

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘ரெட் டிராகன்' கேமிராவை வைத்து சோதனை முறையில் சில காட்சிகளைப் படமாக்கிப் பார்த்து, அது சிறப்பாக வந்ததில் ஏக மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. நவம்பர் 15 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. மே, 2014ல் கோடை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தை லிங்குசாமி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா மூலம் தயாரிக்கிறார்.

 

Post a Comment