சென்னை: நடிகை ராதாவிடம் சென்னை போலீசார் 2 மணிநேரம் அதிரடி விசாரணை நடத்தினர்.
சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்றும், அவரை நம்பி 6 ஆண்டுகள் தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தியதாகவும், தன்னிடமிருந்து நகை மற்றும் பணம் ரூ 50 லட்சத்தை அவர் சுருட்டிக் கொண்டதாகவும் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார் நடிகை ராதா.
பைசூல் பேச்சை நம்பி நடிப்பையும் கைவிட்டதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இப்போது சென்னை சாலிகிராமத்தில் தாயுடன் வசித்து வருகிறார்.
ராதாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த பைசூர், ஏற்கெனவே பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியவர் ராதா என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், ராதாவின் புகாரைப் பதிவு செய்த போலீசார், அதுகுறித்து முதல்கட்டமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேல் அந்த விசாரணை நீடித்தது.
இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு வைர வியாபாரி பைசூலுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர் போலீசார்.
Post a Comment