சென்னை: விஜயகாந்த் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏவும் பிரபல தயாரிப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஒரே நேரத்தில் 3 புதிய படங்களைத் தயாரிக்கிறார்.
இவற்றில் ஜீவா, விமல் மற்றும் அதர்வா நாயகர்களாக நடிக்கிறார்கள்.
நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை போன்ற படங்களைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் அடுத்து, 3 புதிய படங்களை ஒரேநேரத்தில் தயாரிக்கிறார்.
அதில் ஒரு படத்தில், ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி முடிவாகவில்லை. ‘சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இந்தப் படத்தை இயக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
இன்னொரு படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்க, வெற்றிமாறனிடம் உதவி டைரக்டராக இருந்த ரவி அரசு இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘ஈட்டி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மற்றொரு படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்தை கண்ணன் இயக்குகிறார்.
Post a Comment