9-ம் எண் எனக்கு ராசி.. இதையெல்லாமா குறை சொல்வீங்க? - ஹன்சிகா

|

ஹோட்டல்களில் 9-ம் எண் கொண்ட அறையை புக் பண்ணச் சொல்வது உண்மைதான். இது எனக்கு ராசியான எண் என்பதால் அப்படிச் சொல்கிறேன், என்று விளக்கம் அளித்தார் 9-ம் எண் எனக்கு ராசி.. இதையெல்லாமா குறை சொல்வீங்க? - ஹன்சிகா

குறிப்பாக எண்களில் அபார நம்பிக்கை. நடிகை ஹன்சிகாவுக்கு 9 - ம் நம்பர் மீது அபார நம்பிக்கை. வெளியூர் - உள்ளூர் படப்பிடிப்புகளுக்கு சென்று ஓட்டல்களில் தங்கும்போது 9-ம் நம்பர் அறையை கேட்டு வாங்குகிறார். அந்த அறை கிடைக்காவிட்டால் கூட்டு எண் ‘9' என வரும்படியான அறைகளில்தாம் தங்குகிறார்.

9-ம் நம்பர் அறை கிடைக்காத ஓட்டல்களில் தங்க மறுத்து வெளியேறி விடுகிறாராம்.

இதனால் ஹன்சிகாவுக்கு ரூம் போடுவதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறதாம் படக்குழுவினருக்கு. இந்த விவகாரம் ஒரு செய்தியாகவும் மீடியாவில் வெளியாக, அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

அவர் கூறுகையில், "என்னைவிட எனது அம்மாவுக்கு அதிர்ஷ்ட விஷயங்களில் நம்பிக்கை அதிகம். ‘9'-ம் எண்தான் எனக்கு அதிர்ஷ்டம். நீண்ட நாட்களாகவே 9-ம் நம்பர் என்னுடன் வருகிறது. பள்ளியில் படித்தபோது என் ரோல் ‘நம்பர் 9' எனது வீட்டு நம்பரும் ஒன்பதுதான். கார் லைசென்ஸ் நம்பரை கூட்டினாலும் ஒன்பது வரும்.

எனவேதான் ஓட்டல்களில் தங்கும்போதுதான் அறை எண் ஒன்பது என்றோ, அல்லது கூட்டு எண் ஒன்பதாக வரும்படியோ பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு அதிஷ்ட எண்ணாக இருக்கிறது.

இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இதைப் போய் குறை சொல்கிறார்களே?," என்றார்.

 

Post a Comment