விஜய் டிவி சூப்பர் சிங்கர்–4 இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்

|

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-4 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

நேரடியாக இறுதிச்சுற்றுக்கு மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியின் வைல்டு கார்டு சுற்றின் ரிசல்ட்டுகள் கடந்த வாரம் ஒளிபரப்பானது.

இதில் திவாகர், பார்வதி, சையத் சுபான். இவர்களுடன் நான்காவது போட்டியாளராக வைல்டு கார்டு சுற்றின் மூலம் சரத் சந்தோஷ் மற்றும் சோனியா தேர்வாகியுள்ளனர்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர்–4 இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்

நேயர்களின் ஏகோபித்த பாராட்டையும், ஓட்டுக்களையும் பெற்று சரத் சந்தோஷ் லட்சக்கணக்கான ஓட்டுகளின் மூலம் இறுதிச்சுற்றில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதேபோல் மிகவும் நன்றாக பாடி இறுதிச்சுற்றுக்கு தேர்வானார் சோனியா.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெறவிருக்கும் இந்த இறுதிப்போட்டி, வருகிற 31-ந்தேதி சென்னையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

ஐவரும் பாடும் இந்த நேரடி இறுதிப்போட்டியின்போது இந்திய சினிமாவின் இசையுலகைச் சார்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

இந்த இறுதிப் போட்டியில் நேயர்களின் வாக்குகளில் அடிப்படையிலேயே வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் சிங்கர் 4 பட்டத்தோடு லட்சக்கணக்கான மதிப்புள்ள பரிசுகளை வெல்லப்போவது யார் என்பதை இன்னும் சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.

 

Post a Comment