சென்னை: என்னுடைய காதல் இளவரசன் அடைமொழியை, நான் ஆர்யாவுக்குத் தருகிறேன் என்றார் கமல்ஹாஸன்.
பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் மன்னன் என்றார்கள்.
அவரது காலகட்டத்திலேயே நடிக்க வந்த கமலஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டப் பெயர் சூட்டினர் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.
இப்போது கமல் ஹாஸன், உலக நாயகன் என்ற புதிய பட்டத்தைச் சுமக்க ஆரம்பித்துவிட்டார்.
எனவே தனது பழைய பட்டத்தை ஆர்யாவுக்குத் தர விரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார். நயன்தாரா, டாப்சியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து காதல் வலையில் வீழ்த்துவதாக செய்திகள் பரவின. ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷாலும் இதனை உறுதிபடுத்தியது நினைவிருக்கலாம்.
ஆர்யா - நயன்தாரா ஜோடியாக நடித்த 'ராஜா ராணி' படத்தின் 100-வது நாள் விழாவில் பங்கேற்ற கமல்ஹாஸன், "காதல் இளவரசன் பட்டத்தை பல வருடங்களாக நான்தான் வைத்து இருந்தேன். அதை நான் ஆர்யாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆர்யாதான் அடுத்த ‘காதல் இளவரசன்," என்றார்.
ஆர்யா மட்டும் இதுவரை எந்த பட்டத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இனிமேல் போஸ்டர் பேனர்களில் காதல் இளவரசன் ஆர்யா என எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
Post a Comment