சென்னை: த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல் ஹாஸனுக்கு ரூ. 20 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசபே அதை தமிழில் ரீமேக் செய்கிறார். தமிழில் மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல் ஹாஸன் நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையில் ஜீத்துவுடன் சேர்ந்து கமல் சில மாற்றங்களை செய்யவிருக்கிறார் என்று இயக்குனரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமலுக்கு ரூ.20 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.
படத்தில் கமலுக்கு ஜோடியாக நதியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
Post a Comment