சென்னை: காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் கமல் ஹாஸனுக்கு எதற்கு பத்மபூஷண் பட்டம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தங்கர் பச்சான்.
பரபர பேச்சுக்கு பெயர் 'போனவர்' இயக்குநர் தங்கர் பச்சான். கொஞ்சநாள் மவுன விரதம் மாதிரி இருப்பார். அப்புறம் 'என்னங்க நடக்குது இந்த நாட்ல?' என்று பேச ஆரம்பித்துவிடுவார். சகட்டு மேனிக்கு அத்தனை பேரையும் காய்ச்சி எடுப்பார்.
இப்போது கமல் ஹாஸன் மீது பாய்ந்திருக்கிறார்.. அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்காக.
அவர் கூறுகையில், "கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேணாங்கல. ஆனால் அவர் ஒண்ணும் சேவை செய்யலையே. காசு வாங்கிட்டுதானே நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட சுத்தலாம்.
ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே?
இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும்..." என்று பேசி வைத்திருக்கிறார்.
இந்தாளுக்கு என்ன தெரியும் கமல் அருமை என்று அவர் ரசிகர்களும், அவர் பேசியதில் என்ன தவறு என்று கேட்டு ஒரு கூட்டமும் கிளம்பியிருக்கிறது. தங்கர் நினைத்தது நடந்துவிட்டது!
+ comments + 8 comments
அதே நேரம் சம்பாதித்தை அதே கலையில் மறுபடியும் தோல்வி அடைந்த போதும் தளராது தான் நினைத்தை செய்து கட்டியவர்... மற்றவர்கள் போல சினிமாவில் சம்பாதித்து மண்டபம் கட்ட வில்லையே..
thangarbahcaan is correct
viswaroopathil sambathitha panam engey
60 vayathil ivarukku 3 heroine vera
who cares for these awards
all maanged awards
appreciate thangarbachan for his bold true statement
vooraivittu odiduven endra poochandikku kidaitha parisu
most selfish egoistic rat
never deserves this award
congrats thnagarbachan
many better personalities to receive this award
what is wrong in thangarbachan statement
Maruthanayagam padam ennaachu
adhu vandhal BHARATHA RATHNA SURE
thevayatha pozhappu
Post a Comment