மதகஜராஜா... இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீஸாகுமா?

|

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பல முறை தள்ளிப் போடப்பட்ட மதகஜராஜா படம்... வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையாவது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதகஜராஜா... இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீஸாகுமா?  

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலி - வரலட்சுமி நடித்த 'மதகஜராஜா' பட நிதிச் சிக்கல் காரணமாக பல முறை ரிலீஸ் தேதி ரத்து செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் விஷாலே தனது சொந்தப் பட நிறுவனம் மூலம் வெளியிட முயன்று, அது முடியாததால் விரக்தியுடன் கைவிட்டார். இனி இந்தப் படமே வராது என்ற சூழலில், மதகஜராஜாவை வெளிக்கொண்டுவர தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன.

தற்போது இப்பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டுள்ளது. வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் இப்படம் ரிலீசாவதாக அறிவித்துள்ளனர்.

 

+ comments + 1 comments

Anonymous
19 February 2014 at 20:12

doubtful about running of the film

Post a Comment