மீண்டும் புற்று நோயிலிருந்து மீண்ட நடிகை மம்தா!

|

மீண்டும் புற்று நோயிலிருந்து மீண்ட நடிகை மம்தா!

நடிகை மம்தா மோகன்தாஸ் புற்று நோயின் பிடியிலிருந்து மீண்டும் உயிர் தப்பியுள்ளார்.

விஷால் ஜோடியாக ‘சிவப்பதிகாரம்' படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, குசேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

மம்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். பிறகு குணமடைந்து அந்த நோயில் இருந்து மீண்டார்.

அதன் பிறகுதான் அவர் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.

மம்தாவுக்கும், பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. ஒரு வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் பெற்றனர்.

இதையடுத்து மம்தா மோகன்தாஸ் மீண்டும் நடிக்க வந்தார். மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு மீண்டும் புற்று நோய் தாக்கியது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி கீமோதெரப்பி சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப் பின் இப்போது குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் மம்தா.

 

Post a Comment