ராஜ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘‘ஸ்வர்ண சங்கீதம்" நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக சங்கீத பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் நடுவராக இணைந்துள்ளார்.
கர்நாடக இசைப்பாடகர்கள் பங்கேற்கும் ஸ்வர்ண சங்கீதம் சீசன் ஒன்று, இரண்டு வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது. முக்கிய நகரங்களில் தங்க குரலுக்கான தேடல் நடைபெற்றது.
தங்களது குரல் வளத்தை உலகிற்கு பறைசாற்றுவதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தங்களது இனிய குரல் வளத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
நித்யஸ்ரீ மகாதேவன்
ஸ்ரீசித்ரா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபநாசம் அசோக் ரமணி, ஆகியோருடன் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பங்கேற்றுள்ளார்.
10 திறமைசாலிகள்
முதற்கட்ட போட்டியில் தேர்வாகும் 50 போட்டியாளர்களில் முதல் 10 சுற்றுகளுக்குள் நுழையப்போகும் 10 திறமைசாலிகள் யார்?
சுதாரகுநாதன், சவுமியா
இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் போட்டியாளரை, ஒவ்வொரு சுற்றுகளிலும் பிரபல இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், சவுமியா ஆகியோர் தேர்வு செய்வர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்
சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், போன்றோர் இறுதிச்சுற்றில் நடுவர்களாக பங்கேற்று திறமைசாலிக்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
Post a Comment