பனிவிழும் நிலவு - விமர்சனம்

|

Rating:
2.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஹிருதய், ஈடன், கிருஷ்ணன், கோவை சரளா, பாண்டியராஜன்
இசை: எல்வி கணேசன்
தயாரிப்பு: வீ எஸ் பிக்சர்ஸ்
இயக்கம்: கௌசிக்

கல்லூரி, நண்பர்கள் கலாட்டா, காதல், மோதல் என வழக்கமான அம்சங்களுடன் வந்திருக்கும் படம் பனி விழும் நிலவு.

ஹீரோ ஹிருதய் மகா குறும்புக்காரர். இவர் செய்யும் விளையாட்டுத்தனத்தால் உடன் படிக்கும் ஒரு நண்பன் கல்லூரிக்கே வரமுடியாமல் போகிறது.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

உடன் படிக்கும் ஹீரோயின் ஈடனிடம் ஒரு முறை நண்பனுக்காக காதலைச் சொல்லப் போகிறார் ஹ்ருதய். எனக்கு அவனைப் பிடிக்கல என்று கூறிவிடுகிறார். ஆனால் சில காட்சிகள் போனதுமே ஹ்ருதயும் ஈடனும் காதலர்களாகிவிடுகிறார்கள்.

ஒரு நாள் தனது கடற்கரை பங்களாவுக்கு காதலனை அழைக்கிறார் ஈடன். ஏகப்பட்ட சமாச்சாரங்களை கற்பனை பண்ணிக்கொண்டு ரொமான்டிக் மனநிலையில் போகிறார் ஹ்ருதய். அங்கு போன பிறகுதான், தன்னைப் போலவே தன் வகுப்பு நண்பர்களையும் அழைத்திருப்பதும், ஈடன் தன்னைக் காதலிப்பதாக நடித்திருக்கும் உண்மையும் தெரிய வருகிறது.

வெறுத்துப் போன ஹ்ருதய், அந்த கோபத்துடன் நண்பர்கள் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டே போகிறார்.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

அதன் பிறகு ஒரு திருமணத்துக்கு திட்டமிட்டு ஹ்ருதயை வரவழைக்கிறார்கள் நண்பர்கள். அந்த திருமணத்துக்கு ஈடனும் வருகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

நாயகன் ஹ்ருதயால் எல்லாம் செய்ய முடிகிறது. ஆனால் முகத்தில் உணர்வுகளைக் காட்ட இன்னும் முயற்சித்திருக்கலாம். அதேநேரம் வெறுத்துப் போய்த் திட்டுமளவுக்கு மோசமில்லை என்பதே பெரிய விஷயம்தானே.

நாயகி ஈடன் பார்க்க அழகாக இருக்கிறார். தேவையான அளவு நடிப்பையும், தேவைக்கு மேலேயே கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார்.

கல்லூரி நண்பர்களாக வருபவர்கள் ஓகே என்றாலும், காட்சிகளில் கலகலப்பு, நகைச்சுவைப் பஞ்சம்.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, பாண்டியராஜனும் உண்டு. இவர்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி தான் வரும் காட்சிகளில் தன் பாணி இரட்டை அர்த்த வசனங்களை ஏகத்துக்கு அள்ளி விடுகிறார்.

ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆனால் இசை- பாடல்கள் ஈர்க்கும்படி இல்லை. இரண்டாம் பாதியை இன்னும் கச்சிதமாகத் தந்திருக்கலாம்.

கௌசிக் இயக்கத்தில் போன வாரம்தான் ஆதியும் அந்தமும் என்ற ஒரு த்ரில்லர் பார்த்தோம். இந்த வாரம் கல்லூரி காதலை வைத்து ஒரு படம். ஒரு புது இயக்குநரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வருவது சாதாரண விஷயமல்ல. ஆனால் இந்த வாய்ப்பை இன்னும் திறம்பட பயன்படுத்தியிருக்கலாம்!

 

Post a Comment