தோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்

|

சென்னை: தோலில் உண்டாகும் அலர்ஜி காரணமாக இனி இறால் சாப்பிட வேண்டாம் என நடிகை நயன்தாராவுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்களாம்.

நயன்தாராவுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று இறால் குழம்பு. தினமும் உணவோடு இறால் இருந்தால் தான் நயன் சாப்பிடுவாராம். இது தெரிந்தே அவரது வெளியூர் படப் பிடிப்புகளிலும், படக்குழுவினர் தேடி அலைந்து இறால் குழம்பு வாங்கி வைத்து விடுவார்களாம்.

தோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்

ஆனால், தொடர்ந்து சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்து வந்த நயனுக்கு தற்போது சாப்பாட்டிலும் சோதனை வந்து விட்டது. அளவுக்கு அதிகமாக இறால் குழம்பை சாப்பிட்டதால் நயன்தாராவின் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதாம்.

எனவே, நயனுக்கு மிகவும் பிடித்த இறாலை இனி அறவே தொடக்கூடாது என தடை விதித்து விட்டார்களாம் டாக்டர்கள்.

இதனால் மீண்டும் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம்.

 

Post a Comment