கோவை: பிரபல இயக்குநர் குருதனபால் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
குரு தனபால் இயக்கிய முதல் படம் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன். கார்த்திக் - மோனிஷா - சசிகலா நடித்திருந்தனர், இளையராஜா இசையமைத்திருந்தார்.
அடுத்து அவர் இயக்கிய படம் தாய் மாமன். சத்யராஜ் - மீனா - கவுண்டமணி நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது தாய்மாமன்.
இதைத் தொடர்ந்து மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன், சுயேச்சை எம்எல்ஏ போன்ற படங்களை இயக்கினார் குருதனபால்.
உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த குருதனபால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று காலை மரணமடைந்தார்.
நடிகர்கள் கவுண்டமணி, சத்யராஜ் மற்றும் அமரர் மணிவண்ணனுக்கு நெருக்கமாக இருந்தவர் குருதனபால் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment