'அமரர் பாலு மகேந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றி' - சசிகுமார்

|

சென்னை: தலைமுறைகள் படம் மூலம் தேசிய விருது வென்று பெருமை தேடித் தந்த அமரர் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு நன்றி, என்று இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகுமார் தயாரிப்பில் உருவான பாலுமகேந்திராவின் ‘தலைமுறைகள்' திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு நர்கீஸ் தத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'அமரர் பாலு மகேந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றி' - சசிகுமார்

தலைமுறைகள் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தவருமான சசிகுமார் வெளிநாட்டில் இருப்பதால், தனது நன்றியை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் வெளியிட்டுள்ள கடிதத்தில், "பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த தலைமுறைகள் திரைப்படம் 2013-ஆம் ஆண்டின் தேசிய ஒருமைப்பாட்டு படத்திற்கான நர்கீஸ் தட் விருதை பெற்றிருக்கிறது.

தேசிய விருது வழங்கிய மத்திய அரசுக்கும், படத்தை தயாரிக்கக் காரணமாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment