பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்! - ராகவா லாரன்ஸ்

|

சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிற்கும் கோச்சடையான்! - ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படமாக அமைந்துள்ளது கோச்சடையான் என்று நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்! - ராகவா லாரன்ஸ்

நேற்று வெளியான ரஜினியின் "கோச்சடையான்" படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை:

கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவர் பொம்மை போல நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

ரஜினி பொம்மையாக நடிப்பது ரசிகர்களை திருப்திப்படுத்துமா? என்றார்கள். படம் பார்த்த ரசிகர்களோ ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள். பொம்மையாக வந்தாலும், உண்மையாக வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலகப் பயணத்தில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதி படுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்," என்று லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கோச்சடையானைப் பாராட்டி முதல் அறிக்கை தந்துள்ள ஒரே கோடம்பாக்க நடிகர் ராகவா லாரன்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை. காரணம், திரையுலகினருக்கு சிறப்புக்காட்சி எதுவும் நேற்று போடப்படவில்லை.

 

Post a Comment