சென்னை: நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிற்கு ‘பை பை' சொன்ன நடிகை அமலா, 23 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
1980 மற்றும் 90-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் நடித்த பல படங்கள் வெற்றி விழா கண்டவை.
திருமணம்...
தமிழைப் போலவே தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்த அமலா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
பிராணிகள் பாதுகாப்பு...
திருமணத்திற்குப் பின் குடும்பம், சமூக சேவை என தன் கவனத்தை வேறு திசையில் திருப்பினார். தற்போது பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
மறுப்பு...
இதற்கிடையே, கணவரின் திரைப்பட விழாக்களில் அவ்வப்போது தலை காட்டிய அமலா, தனக்கு படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.
மெகா சீரியல்....
ஆனால், தற்போது தமிழில் தயாராகும் டி.வி. தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம் அமலா. கதை பிடித்திருந்ததால் அத்தொடரில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
சென்னைப்பட்டணம்...
இதுகுறித்து அமலா கூறும்போது, ‘‘சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கு சில காலம். ஆகலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
டாக்டர்...
மேலும், சீரியலில் தன் கதாபாத்திரம் குறித்து கூறுகையில், ‘இந்த சீரியலுக்கு உயிர்மை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நான் டாக்டராக நடிக்கிறேன்.
கதைக்களம்...
மொத்தம் 12 டாக்டர்களின் வாழ்க்கையைச் சுற்றி கதைக்களம் அமைக்கப் பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அமலா.
Post a Comment