ரோஸ் டெய்லர்.... நியூஸிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர். இவருக்கு நடிகர் ரஜினியின் லிங்கா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க விருப்பமாம்.
'லிங்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது.
அதனை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "நிச்சயம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டிய படம்" என்று குறிப்பிட்டு #thailavarrajnikanth #superstar #favorite #legend ஆகிய ஹேஷ்டேக்குகளை பதிவு செய்திருந்தார்.
தினேஷ் கார்த்திக்கின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடரும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர், 'லிங்கா' குறித்த அந்தப் பதிவுக்கு பதில் அளித்திருந்தார். அதில், 'உலகின் மிகச் சிறந்தவர்களில் ஒருவர்' என நடிகர் ரஜினியை ரோஸ் டெய்லர் புகழ்ந்திருந்தார்.
ரோஸ் டெய்லருக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "உங்களிடம் இருந்து இதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் ரஜினிகாந்த் படத்தைப் பார்ப்பதற்கு நீங்களும் தயாராகுங்கள்," என்று கூறியிருந்தார்.
அதற்கு ரோஸ் டெய்லர், "நிச்சயம்.. அடுத்த முறை நான் வரும்போது அழைத்துச் செல்லுங்கள்.." என்று பதிலளித்துள்ளார்.
ட்விட்டரில் இதையெல்லாம் பார்த்த ரஜினி ரசிகர்கள், ரோஸ் டெய்லரும் தீவிர ரஜினி ரசிகர் என்று கூறி பதிவுகள் போட்டு வருகின்றனர்.
Post a Comment