சோக லாலி பாடும் "லாலா கடை" நடிகை!

|

லாலா கடை நடிகை சினிமாவில் நடிக்க வந்து தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே திருமணமும் செய்து கொண்டார். பின்னர் கசப்பு ஏற்பட்டு கணவரை விவாகரத்தும் செய்துவிட்டார்.

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் தவறாமல் திரை உலகினர் வைக்கும் பார்ட்டிகளில் பங்கேற்பார். காரணம் மீண்டும் சினிமா சான்ஸ் வருமே என்றுதான்.

ஆனால் குத்தாட்ட வாய்ப்புதான் கிடைத்தது அதையும் விடாமல் ஆடிக்கொடுத்தார். அதற்கு கைமேல் பலனாக கிடைத்ததுதான் பிரபல டிவி சேனலில் சீரியல் வாய்ப்பு. தினத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் பேசி நடிக்கவும் செய்தார்.

திடீரென என்ன நேர்ந்ததோ ஸ்வீட் நடிகையை தூக்கிவிட்டு வேறு நடிகையை போட்டுவிட்டனர். காரணம் நடிகைக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு சீரியல் வருமானம் கொட்டவில்லையாம்.

ரசிகர்களிடம் சரியான வரவேற்பு இல்லாத நிலையில் யார் நடித்தால் என்ன என்று சத்தமில்லாமல் நடிகையை தூக்கிவிட்டனர் என்கின்றனர். கடைசியில் ஸ்வீட் நடிகை சீரியல் வாய்ப்பும் இன்றி பார்ட்டிகளில் மட்டுமே இப்போது பங்கெடுத்து வருகிறாராம்.

 

Post a Comment