லிங்கா டிரைலர்... சூப்பர், வாவ்... பாராட்டித் தீர்க்கும் திரைப் பிரபலங்கள்!

|

சென்னை: இன்று ரிலீசாகியுள்ள ரஜினியின் லிங்கா பட டிரைலருக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் லிங்கா. இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து நேரிலும், இணையத்திலும் லிங்கா படத்தின் டிரைலரைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் சிலர் ரஜினி மற்றும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை சமூக வலை தளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அவற்றில் சில...

ராதிகா சரத்குமார்...

இது தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்டுள்ள பதிவில், ‘சூப்பர், சூப்பர், சூப்பர் லிங்கா டிரைலர். ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கி விட்டார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா...

லிங்கா பட நாயகிகளுள் ஒருவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா, ‘ரசிகர்களே, லிங்கா பட டிரைலர் யூடியூப்பில் வெளியாகி விட்டது. யாரும் மிஸ் செய்து விடாதீர்கள்' எனக் கூறியுள்ளார்.

Post by Lingaa The Movie.

ராய் லட்சுமி...

ராய் லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ சூப்பர்ஸ்டார்... மாஸ்... பட ரிலீசிற்காக காத்திருக்கிறேன். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்' எனப் பதிவு செய்துள்ளார்.

வெங்கட் பிரபு...

இது தொடர்பாக வெங்கட் பிரபு தனது பக்கத்தில், ‘ப்பா... முழுப்படத்தையும் காண காத்திருக்க முடியவில்லை' என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரேம்ஜி அமரன்...

இதேபோல், பிரேம்ஜி அமரன், ‘தலைவர்...' எனப் பதிவு செய்து இரண்டு கைகளையும் கூப்பியவாறு உள்ள சிம்பள்களை அடுக்கி வைத்துள்ளார்.

சின்மயி...

பாடகி சின்மயியும் பிரேம்ஜி போலவே, தலைவா... என்ற வார்த்தையைப் பதிவு செய்துள்ளார்.

ஹன்சிகா...

நடிகை ஹன்சிகா, ‘போடு, போடு விசில் போடு' என்றும், கை தட்டும் மற்றும் சூப்பர் என்ற சிம்பளையும் பதிவு செய்துள்ளார்.

 

+ comments + 2 comments

Anonymous
17 November 2014 at 20:00

வெங்கட் பிரபு தனது பக்கத்தில், ‘ப்பா... முழுப்படத்தையும் காண காத்திருக்க முடியவில்லை' என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார் - I second Venkat Prabu

18 November 2014 at 00:10

வெங்கட் பிரபு தனது பக்கத்தில், ‘ப்பா... முழுப்படத்தையும் காண காத்திருக்க முடியவில்லை' என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார் - I second Venkat Prabu -

Post a Comment