ஹீரோயினை 'லூசு' என்று கூறி சமாளித்த இயக்குனர்

|

சென்னை: இசை வெளியீட்டு விழாவில் பெயரில் சந்தோஷத்தை வைத்திருக்கும் இயக்குனர் தனது படத்தின் ஹீரோயினை லூசு என்று கூறி சமாளித்தார்.

மாப்பிள்ளை நடிகரையும், புதுமுக நடிகையையும் வைத்து பெயரில் சந்தோஷத்தை வைத்திருக்கும் இயக்குனர் எடுத்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் தனது ஹீரோ, வில்லன் நடிகர் பற்றி எல்லாம் விரிவாக பேசினார்.

பேச்சுவாக்கில் அவர் ஹீரோயினை பற்றி பேச மறந்துவிட்டார். பின்னர் திடீர் என்று நினைவுக்கு வர நடிகை பார்க்க லூசு போன்று இருப்பாரே தவிர தெளிவுதான். அவர் லூசு மாதிரி தெரிவதால் தான் படத்தில் நடிக்க வைத்தேன். ஏன் அன்றால் அவரது கதாபாத்திரம் அப்படி என்றார்.

என்னடா இயக்குனர் தனது பட ஹீரோயினை லூசு என்கிறாரே என்று விழாவில் கலந்து கொண்டவர்கள் வியந்தனர். இயக்குனர் உளறிவிட்டதை உணர்ந்து ஒரு வகையாக சமாளித்தார்.

இந்த படத்தில் ஹீரோ அருமையாக நடித்துள்ளார் என்று இயக்குனர் அவரை புகழ்ந்து தள்ளினார்.

 

Post a Comment