சென்னை: மேனன் இயக்குனரின் பட விஷயத்தில் உயர்ந்த நடிகை நம்பர் நடிகை மீது கோபத்தில் உள்ளாராம்.
மேனன் இயக்குனர் எடுத்து வரும் படத்தில் உயர்ந்த நடிகை மட்டும் தான் ஹீரோயின் என்று கூறியிருந்தார்களாம். நம்பர் நடிகையை கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க தான் இயக்குனர் அழைத்தாராம். நம்பர் நடிகை படத்தில் நடிப்பாரா இல்லையா என்று இருந்த நிலை மாறி ஒரு வழியாக நடிக்க வந்தார்.
ஆனால் கௌரவத் தோற்றத்தில் நடிக்க வந்த இடத்தில் இயக்குனரிடம் என் கதாபாத்திரத்தை பெரிதுபடுத்துங்கள். எனக்கு இன்னும் கொஞ்சம் காட்சி கொடுங்கள் என்று நடிகை வற்புறுத்தி வந்துள்ளார். அவரது வற்புறுத்தலை அடுத்தே இயக்குனர் நம்பரின் கதாபாத்திரத்தை மற்றொரு ஹீரோயினாக்கிவிட்டாராம்.
இப்படி தலையை காட்டிவிட்டு செல்லும் காட்சியில் நடிக்க வந்து ஹீரோயினான நம்பர் நடிகை மீது உயர்ந்த நடிகை கோபத்தில் உள்ளாராம். மார்க்கெட் இல்லாத காரணத்தால் நம்பர் நடிகை தற்போது இளம் ஹீரோக்களை குறிவைத்து அவர்களின் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
நம்பர் நடிகைக்கு அவ்வப்போது திருமணம் என்று செய்தி வந்தாலும் அவர் இன்னும் மணமேடை ஏறும் நேரம் வரவில்லை.
Post a Comment