இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் லிங்கா!

|

ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் வரும் டிசம்பர் 26-ம் தேதி இந்தியில் உலகெங்கும் வெளியாகிறது. வட இந்தியாவில் அதிக அரங்குகளில் வெளியிட ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்த படம் லிங்கா. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் லிங்கா!

படத்தின் இந்திப் பதிப்பை அதே தேதியில் வெளியிடப் போவதாகக் கூறியவர்கள், திடீரென நிறுத்திவிட்டனர்.

இப்போது வரும் டிசம்பர் 26-ம் தேதி இந்திப் பதிப்பை உலகெங்கும் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கில் இரண்டே முக்கால் மணி நேரமாக உள்ள இந்தப் படம், இந்தியில் இரண்டரை மணி நேரப் படமாக வெளியிடப்படுகிறது. மேலும் சில காட்சிகள் இதில் குறைக்கப்பட உள்ளன.

 

Post a Comment