தெரிகிறதா... இவர்தான் விக்ரம்... நடிப்பு ராட்சஸன்!

|

ஒரு பாத்திரத்துக்காக எந்த அளவு ஆபத்தையும் சந்திக்கத் தயங்காதவர்களில் விக்ரமும் ஒருவர்.

குறிப்பாக ஷங்கரின் ஐ படத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால் மிகையல்ல. கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வரும் அவரது ஒரு நோஞ்சான் படத்தைப் பார்த்தாலே அதைப் புரிந்து கொள்ளலாம்.

தெரிகிறதா... இவர்தான் விக்ரம்... நடிப்பு ராட்சஸன்!

படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்து, எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிக்கும் அந்தப் படம் பார்ப்பவர் கண்களை குளமாக்கும்.

இது விக்ரம்தானா? இந்த மனிதர் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கிறார்.. இப்படியெல்லாம் கூட ஒருவரால் சினிமாவுக்காக மெனக்கெட முடியுமா? என்று பிரமிப்பும் கவலையும் கலந்த தொனியில்தான் ஒவ்வொருவரும் கேட்டு வருகின்றனர்.

இனி விக்ரம் இதுமாதிரி ஆபத்தான விளையாட்டில் இறங்கவே கூடாது என அவரது மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

விக்ரம் இத்தனை சிரமப்பட்டு நடித்துள்ள ஐ படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம் பட்ட பாட்டுக்கு ரசிகர்கள் தரும் மரியாதை.. அவர் படத்தை திரையில் போய் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ற இருக்கும்!

 

Post a Comment