நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா.
வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர்.
மிக இக்கட்டான நேரத்தில் விஜய்க்கு குஷி என்ற மெகா ஹிட் படத்தைத் தந்தவர்.
மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா நடித்து, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள இசை படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
குஷி படத்துக்குப் பிறகு விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து புலி என்ற பெயரில் படம் உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்தத் தலைப்பைத்தான் இப்போது சிம்பு தேவன் இயக்கும் விஜய் படத்துக்கு சூட்டியுள்ளனர்.
விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து எஸ் ஜே சூர்யா கூறுகையில், "நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் விஜய் என்னுடைய படத்தின் பாடல்களை வெளியிட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவருடன் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்ய விரும்புகிறேன்," என்றார்.
Post a Comment