சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆதரவற்ற சிறுவர்களின் கடைசி ஆசையை இளையதளபதி விஜய் நிறைவேற்றி வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் தங்கியுள்ள 3 சிறுவர்கள் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அதனால் ஆண்டவனின் கருணையை எதிர்பார்த்து அந்த 3 சிறுவர்களும் உள்ளனர்.
தங்களின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அந்த சிறுவர்களிடம் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள், இளையதளபதி விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கடைசி ஆசை பற்றி விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தார் விஜய். இதையடுத்து அந்த 3 சிறுவர்களை சந்தித்து அவர்களுடன் பேசி அவர்களை சிரிக்க வைத்தார். பின்னர் அவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து விஜய் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறுவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
Post a Comment