சென்னை : விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தின் நாயகியாக
மாஸ் படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் '24' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
தற்போது இப்படத்தின் நாயகி சமந்தா எனத் தெரிய வந்துள்ளது.
மற்ற படங்களைப் போல ஹீரோவுடன் டூயட் பாடினோம் என்று மட்டும் இல்லாமல், இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பேசப்படும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரமாம்.
எனவே, அஞ்சான் படத்தில் கவர்ச்சி விருந்தளித்த சமந்தா, இப்படத்தில் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளிக்கப் போகிறாராம்.
Post a Comment