லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கமலின் உத்தம வில்லன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகிய படங்களை வாங்கியது ஈராஸ் நிறுவனம்.
ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள உத்தம வில்லன் படத்தை லிங்குசாமியும் கமலும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஏற்கெனவே ஈராஸ் வாங்கியிருந்தது. இப்போது பட வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது ஈராஸ். தெலுங்கிலும் இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனமே வெளியிடுகிறது.
ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் நிறுவனமே வாங்கியுள்ளது.
எதிர்ப்பார்ப்புக்குரிய இரு பெரிய படங்களை வாங்கி, தமிழில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது ஈராஸ்.
Post a Comment