நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

|

ராஜ்கோட்: நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இதையடுத்து அவரை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகை சோனம்கபூர், சல்மான்கானுடன் ஒரு புதிய இந்திப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதற்காக ராஜ்கோட்டில் முகாமிட்டுள்ளார் சோனம் கபூர்.

நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

படப்பிடிப்புக்காக வந்தது முதலே தொடர்ந்து காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார் சோனம் கபூர். இதையடுத்து அவருக்கு ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்து சோதனைகள் நடத்தப்பட்டன. ரத்தப் பரிசோதனையில் சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனம் கபூர் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)

 

Post a Comment