செல்ஃபி எடுத்தா எல்லாம் சரியாகிவிடுமா?: மோடியின், "மகளுடன் செல்ஃபி"யை விமர்சித்த நடிகை

|

மும்பை: இந்தி நடிகை ரிச்சா சத்தா பிரதமர் நரேந்திர மோடியின் மகளுடன் செல்ஃபி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டில் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைத்த பிரதமர் நரேந்திர மோடி பெற்றோர்களை தங்களின் மகள்களுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுமாறு கூறினார். இதையடுத்து பலரும் மகள்களுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Richa Chadda criticizes Modi's selfie with daughter

இந்நிலையில் இது குறித்து இந்தி நடிகை ரிச்சா சத்தா கூறுகையில்,

வரதட்சணை, பாலியல் கொடுமை, ஈவ் டீஸிங் உள்ளிட்ட பிரச்சனைகள் செல்ஃபி எடுப்பதால் தீர்ந்துவிடாது. பெண்களின் சுதந்திரம் முதலில் பூமியில் பிறப்பது ஆகும். அதன் பிறகு அவர்கள் படித்து, தங்களுக்கு பிடித்த வேலைக்கு சென்று, பிடித்தவரை திருமணம் செய்ய வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் இது எல்லாம் நடப்பதே பெரிய முன்னேற்றமாக உள்ளது என்றார்.

முன்னதாக மகளுடன் செல்ஃபி குறித்து நடிகை ஸ்ருதி சேத் விமர்சனம் செய்து மோடி ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment