அடுத்தடுத்த படங்களில் வரிசை கட்டி பாடும் "தளபதி"

|

சென்னை: புலி படத்தில் நடிகை சுருதியுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருந்த நடிகர் விஜய், தற்போது அடுத்ததாக தான் நடித்து வரும் விஜய் 59 படத்தில் 2 பாடல்களைப் பாடி இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்களில் அவரது பாடல்களும் தவறாமல் இடம்பெற்றன, காலப்போக்கில் தான் நடிக்கும் படங்களில் பாடுவதை விஜய் குறைத்துக் கொண்டார்.

ஆனால் 3 வருடங்களுக்கு முன் துப்பாக்கி படத்தில் ஒரு பாடலைப் பாடிய விஜய் துப்பாக்கி முதல் புலி வரை தான் நடிக்கும், ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலையாவது பாடி வருகிறார்.

vijay 59 Update

விஜய் பாடிய பாடல்கள் தொடர்ந்து ஹிட்டடிப்பதால் விஜயின் படங்களில் தவறாமல் விஜய்க்கும் ஒரு பாடலை படக்குழுவினர் ஒதுக்கி விடுகின்றனர்.

புலியைத் தொடர்ந்து விஜய் அடுத்தபடியாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் 2 பாடல்களை ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வரும் இந்தப் படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்று கூறுகின்றனர், இசையமைப்பாளர் தேவா ஒரு லோக்கல் கானா பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வளர்ந்து வரும் விஜய் 59 திரைப்படம், 2016 ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment