சென்னை: ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அதை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது படக் குழு.
இந்த வெற்றியை வித்தியாசமாக கொண்டாடியிருக்கின்றனர் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர். வெற்றியால் மகிழ்ந்து போன அந் நிறுவனம் படக்குழுவினருடன் இணைந்து சுமார் 1500 ஏழை மக்களுக்கு அன்னதானம் அளித்து படத்தின் வெற்றியைக் கொண்டாடியிருக்கின்றனர்.
திருட்டுப் பயலே படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது.
அண்மைக்காலமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன, எனினும் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த நிலையை அண்மையில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் மாற்றியிருக்கிறது.
தனிஒருவன் படம் வரவேற்பில் மட்டுமின்றி வசூலிலும் பெரிதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, தனிஒருவன் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து 1500 பேருக்கு அன்னதானம் செய்து கொண்டாடியிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
நேற்று தியாகராய நகரில் இந்த அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது கல்பாத்தி சகோதரர்கள், இயக்குநர் மோகன்ராஜா, எடிட்டர் மோகன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீசரண் மற்றும் ஒளிபதிவாளர் ராம்ஜி ஆகியோர் இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் தாங்களே மக்களுக்கு உணவு பரிமாறி அன்னதான விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
Post a Comment