12/28/2010 12:01:52 PM
ஏற்கனவே அனுஷ்கா. ஆறடி உயரம், அவரது உயரத்தை போலவே அவரது கேரியரும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. முதலில் விஜய், சூர்யா, விக்ரம் என அடுத்தடுத்த பெரிய ஹிரோக்களுடன் நடிக்கும் அனுஷ்காவிற்கு ஜக்பாட் அடித்துள்ளது. தலைவன் இருக்கின்றான் படத்துக்கு அனுஷ்காவை கமல் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது. படத்திற்காக அனுஷ்காவிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கமல் கேட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது தமிழில் சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வேறு புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் உள்ளார்.
தலைவன் இருக்கின்றான் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கமல்ஹாஸன் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம். புத்தாண்டில் இந்தப் பதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்.
Post a Comment