மலையாள படத்தில் ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!
1/21/2011 2:49:53 PM
'பழஸிராஜா'வில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார் சரத்குமார். இப்போது இன்னொரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் சரத். அதுவும் ஹீரோவாக நடிக்கிறார் சரத். படத்தின் பெயர் 'மெட்ரோ’. இதுபற்றி சரத் கூறுகையில், 'ஏற்கெனவே நேரடி தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். மலையாளத்தில் 'பழஸி ராஜா'வில் நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கவும் மேலும் நிறைய வாய்ப்பு வருகிறது. பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிப்பேன்'என்றார் சரத்.
Source: Dinakaran
Post a Comment