கோ எனது சொந்த அனுபவம் : கே.வி.ஆனந்த்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோ எனது சொந்த அனுபவம் : கே.வி.ஆனந்த்
1/22/2011 10:50:50 AM
'கோ' படத்தின் கதை எனது சொந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டது என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறினார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் குமார், ஜெயராமன், ஜெயந்த் தயாரிக்கும் படம் 'கோ'. ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இயக்குனர் பிரியதர்ஷன் வெளியிட, பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின், மற்றும் படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது:
எனது மூன்றாவது படம் 'கோ'. இந்தப் படத்திலும் நல்ல டீம் அமைந்துள்ளது. நான் ஒளிப்பதிவாளராவதற்கு முன் பத்திரிகை புகைப்பட கலைஞராக பணியாற்றினேன். அப்போது எனக்கும், எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சுறுசுறுப்பானவர்கள். அந்த கேரக்டருக்கு ஜீவாதான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். பெண் நிருபர் கேரக்டருக்கு தமிழ் முகமாகவும் இருக்க வேண்டும் கொஞ்சம் ஆங்கில ஸ்டைலும் இருக்க வேண்டும் என்ற வகையில் ஹீரோயின் தேடியபோது கார்த்திகா பொருத்தமானவராக தெரிந்தார். இருவருமே போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 5 பாடல்கள் இடம் பெறுகிறது. ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புடையதாக அமைந்துள்ளது.


Source: Dinakaran
 

Post a Comment