2/2/2011 12:06:39 PM
'தாமிரபரணி' படத்தில் அறிமுகமானவர் பானு. பிறகு சில படங்களில் நடித்தவர், சொந்த மாநிலமான கேரளாவுக்கே திரும்பி விட்டார். அவருக்கு திருமணமாகி விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 'சட்டப்படிக் குற்றம்' படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நல்ல வாய்ப்புகள் வந்தபோது என் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் வாய்ப்புகளை தவிர்த்தேன். எல்லாம் சரியாகி நடிக்க வந்தபோது வாய்ப்பில்லை. அதற்கான காரணத்தை விசாரித்தபோது நான் திருமணமாகி செட்டிலாகி விட்டதாக வதந்தி பரவி இருப்பது தெரிந்தது. தற்போது 'சட்டப்படிக் குற்றம்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இதுதவிர 'பொன்னர் சங்கர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன்.
Post a Comment