கவுதம் மேனன் வீடு முற்றுகை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவுதம் மேனன் வீடு முற்றுகை

2/28/2011 11:03:58 AM

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் வீட்டை முற்றுகையிட்ட, இந்துமக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கவுதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் Ôநடுநிசி நாய்கள்Õ. இந்த படத்தில் வளர்ப்பு தாயை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் ஆபாசமாக படத்தை எடுத்துள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை தரமணி கானகம் பகுதியில் உள்ள கவுதம் மேனனின் வீட்டை, இந்து மக்கள் கட்சியினர் நேற்று காலை முற்றுகையிட வந்தனர். தகவல் கிடைத்து அடையாறு துணை கமிஷனர் தலைமையில் போலீசார் விரைந்தனர். ஆர்ப்பாட்டம் நடந்த முயன்ற அவர்களை, கைது செய்தனர். இச்சம்பவம் பற்றி கவுதம் மேனன் கூறுகையில், ''நடுநிசி நாய்கள்Õ படத்தின் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவனை அறியாமல் நடக்கும் நிகழ்வுகளைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன்ÕÕ என்றார்.


Source: Dinakaran
 

Post a Comment